;
Athirady Tamil News

பெண்ணிடம் இருந்து கைப்பையை பறித்துகொண்டு புகையிரதத்தில் இருந்து குதித்த நபர்…!!

0

ஜோலார்பேட்டை அருகே பயணித்து கொண்டிருந்த புகையிரதத்தில் பெண்ணிடம் இருந்து 4 கிராம் தங்க நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் ஒருவர் பறித்து கொண்டு தப்பியோடியுள்ளார்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :- கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த புடைவை வியாபாரியான பாபுவுடன் அவரது மனைவி குமுதா பெங்களூரில் இருந்து திருப்பதி செல்லும் திருப்பதி எக்ஸ்பிரசில் நேற்று முன் தினம் இரவு 10 மணிக்கு பயணத்தை ஆரம்பித்தனர்.

குறித்த புகையிரதம் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பார்சம்பேட்டை புகையிரத கேட்டில் நேற்று நள்ளிவு 1:30 மணிக்கு ஒளி சமிக்கைக்காக மெதுவாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் குமுதாவிடம் இருந்த கைப்பையை பறித்து கொண்டு புகையிரதத்தில் இருந்து குதித்து தப்பியோடியுள்ளார்.

பறிகொடுக்கப்பட்ட குறித்த கைப்பையில் 4 கிராம் தங்கமும் 20 ஆயிரம் ரூபாய் பணமும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து குமுதா அளித்த முறைப்பாட்டின் பேரில் ஜோலார்பேட்டை புகையிரத பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two − 1 =

*