;
Athirady Tamil News

சில்மிஷத்தில் ஈடுபட்ட தமிழ்ப் பட ஹீரோவை கன்னத்தில் ஓங்கி அறைந்த ராதிகா ஆப்தே..!!

0

தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தமிழ்ப் பட ஹீரோவை ஓங்கி அறைந்ததாக பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.

தமிழில், தோனி, கபாலி, என மொத்தம் 5 படங்களில் மட்டுமே நடித்திருப்பவர் இந்தி நடிகை, ராதிகா ஆப்தே.

சினிமா துறையில் பாலியல் தொல்லைகள், ஹீரோ ஆதிக்கம் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேசும் ராதிகா ஆப்தே, சமீபத்தில் இந்தி நடிகை நேகா துபியா நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதே குறித்த பரபரப்புத் தகவலை தெரிவித்துள்ளார் ராதிகா ஆப்தே.

அதில் அவர் கூறியதாவது..,

தமிழில் ஒரு படத்தில் நான் நடித்தேன். அந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலேயே ஹீரோ என்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அவர் தமிழில் பெரிய நடிகர். இதற்கு முன் அவரை நேரில் பார்த்தது கூட இல்லை. என் பாதங்களை அவர் வருடியதும் கோபத்தில் அவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

ராதிகா சொன்ன விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன். வெற்றிச்செல்வன், தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி, உலா, என மொத்தம் ஐந்து தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்துள்ள ராதிகா ஆப்தே, எந்த ஹீரோவை அறைந்தார் என்று ரசிகர்கள் குழப்பத்திலுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 4 =

*