;
Athirady Tamil News

பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியவருக்கு நேர்ந்த கெதி…!!

0

திருகோணமலை 30 வயதுடைய மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபரொருவருக்கு ஏழு வருட கட்டாய சிறைதண்டனையும், ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்குமாறு திருகோணமலை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரை வீட்டில் வைத்து வல்லுறவுக்குட்படுத்துவதாக குறித்த நபருக்கெதிராக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த நபரை வழக்கில் குற்றவாளியாக இனங்கண்ட உயர் நீதிமன்ற நீதிவான் பிரேம சங்கர், ஏழு வருட கட்டாய சிறைதண்டனையும், ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் நஷ்ட ஈடும் அத்தொகையினை செலுத்தத் தவறும் பட்டத்தில் மேலும் இரண்டரை வருடங்கள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

புல்மோட்டை, இந்திவெவ – மகேசன்புர பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவருக்கே இவ்வாறு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 1 =

*