;
Athirady Tamil News

நடேஸ்வர கல்லூரியை முழுமையாக விடுவிக்க உத்தரவு…!!

0

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை நடஸ்வரா கல்லூரிக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று
பொலிஸாரது பாவனையில் இருந்து வந்த நிலையில் அதனை மீள கையளிக்க வடமாகாண
பிரதி பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இன்று முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற பொலிஸாருக்கு இடையிலான மாதாந்த
சந்திப்பின் போதே இவ் உத்தரவை பிரதி பொலிஸ்மா அதிபர் வழங்கியிருந்த்தாக
முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நடேஸ்வரா கல்லூரியானது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து
விடுவிக்கப்பட்ட போதும் அப் பாடசாலைக்கு சொந்தமான கட்டிடமொன்றும் கிணறும்
தொடர்ச்சியாக பொலிஸாரது பாவனையில் இருந்து வந்துள்ளது.

இந்நிலையிலேயே அதனை மீள பாடசாலையிடம் ஒப்படைக்க வேண்டும் என தாம் வடமாகாண
பிரதி பொலிஸ்மா அதிபருக்கு தெரிவித்திருந்தாகவும் இதனையடுத்து பிரதி
பொலிஸ்மா அதிபர் குறித்த கட்டிடம் மற்றும் கிணறு ஆகியவற்றை மீள
பாடசாலையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்த்தாகவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 12 =

*