;
Athirady Tamil News

மன்னார் பிரதேசத்தில் பல்வேறு குறைபாடுகள்! – அதிகாரிகள் தெரிவிப்பு..!!

0

மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை)
மன்னார் பிரதேசச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, மாவட்டத்தில்
காணப்படும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் இணைத்தலைவர்களின் கவனத்திற்கு
கொண்டுவரப்பட்டது.

ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான
செல்வம் அடைக்கலநாதன், கே.கே.மஸ்தான் ஆகியோர் தலைமையில் தலைமையில்
நடைபெற்ற குறித்த கூட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து
கலந்துரையாடப்பட்டது.

மேலும், இதன்போது கடந்த வருடம் இடம்பெற்ற மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக்
குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் விரிவாக
ஆராயப்பட்டது.

அதனைத் தொடந்து கல்வி, மீன்பிடி, சுகாதாரம், விவசாயம், கமத்தொழில்,
போக்குவரத்து, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற செயற்பாடுகள், இலங்கை
போக்குவரத்துச் சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், வீதி அபிவிருத்தி
அதிகார சபை, மன்னார் பிரதேச சபை, மன்னார் நகர சபை, அரச கால்நடை, இலங்கை
மின்சார சபை, தொழிற்துறை திணைக்களம் ஆகிய திணைக்களங்களின் செயற்பாடுகள்
குறித்து, திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து
கிராம அலுவலர்களும் கிராம மட்ட தலைவர்களும், அபிவிருத்திக் குழு
இணைத்தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

மன்னார் பிரதேசச் செயலாளர் மரியதாசன் பரமதாசனின் நெறிப்படுத்தலில்
இடம்பெற்ற குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற
உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர்
ஜீ.குணசீலன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அலிக்கான் சரீப்,
எஸ்.எம்.ஏ.நியாஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − six =

*