;
Athirady Tamil News

பிரித்தானியாவில் கற்கும் சர்வதேச மாணவர்களின் கட்டண அறவீடு குறைய வாய்ப்பு..!!

0

பிரித்தானியாவில் எதிர்வரும் 12 வருடங்களில் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என புதிய புள்ளிவிபரமொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 12 வருடங்களில் பல்கலைக்கழகங்களில் கற்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்திற்கும் அதிகமாகக் காணப்படுமெனவும் தகவல்.

இது குறித்து HESA வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் கடந்த 2016-2017ஆகிய ஆண்டுகளில் பிரித்தானியாவில் கல்வி பயின்ற சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 442,375 ஆக கணிப்பிடப்பட்டுள்ளது.

இதில், 42 சதவீத மாணவர்கள் ஐரோப்பிய ஒன்றியததை தவிர்ந்த ஏனைய உலக நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் 18 வயதுக்க மேற்பட்ட சர்வதேச மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பல்கலைக்கழகங்களில் சுமார் 50 ஆயிரமாக அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

இதேவேளை பல்கலைக்கழகங்களுக்கான நிதியுதவித்திட்டம் மற்றும் கட்டணஅறவீடு தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய உத்தேசித்துள்ளதாக அண்மையில் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + fifteen =

*