;
Athirady Tamil News

பிரித்தானியா இரசாயண ஆயுதங்களை தாக்கப்படுவதற்கு எதிராக பதிலடி…!!

0

பிரித்தானியா இராசாயண ஆயுதங்களால் தாக்கப்படுவதற்கு எதிராக, புதிய இரசாயன ஆயுத மையமொன்றை 48 மில்லியன் பவுண்ட்ஸ் செலவில் நிறுவ திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் இன்று அறிவித்துள்ளார்.

இது குறித்து பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் காவின் வில்லியம்சன் இன்று பிரிஸ்டலில் உரையாற்றுகையில், அண்மையில் சாலிஸ்பரி இடம்பெற்ற தாக்குதலையடுத்து, தாம் புதிய இரசாயண ஆயுத மையமொன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்யா தங்கள் குடிமக்களுக்கு சாலிஸ்பரி தாக்குதல் மூலம் ஒரு அச்சுறுத்தலை விடுத்துள்ளமையும் இந்த பொறுப்பற்ற தாக்குதல் அதிர்ச்சியூட்டியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், போர்டன் டவுன் பகுதியில் பாதுகாப்பு அறிவியல் மற்றும் இரசாயண தொழில்நுட்ப ஆய்வு மையத்தையும் 48 மில்லியன் பவுண்ட்ஸ் செலவில் நிறுவத் திட்டமிட்டுள்ளதாக கெவின் வில்லியம்ஸன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 − 1 =

*