;
Athirady Tamil News

வடக்கு லண்டனில் 14 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு- தகவல் கோரும் பொலிஸார்…!!

0

பிரித்தானிய தலைநகர் லண்டனிலுள்ள செவன் ஸிஸ்டர்ஸ் ரயில் நிலையத்திற்கு அண்மையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுவன் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் இரவு 11 மணிக்கு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தெரிவித்துள்ளனர்.

எனினும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் கிடைக்காத நிலையில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும, இந்த சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மேற்படி சம்பவம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, வடக்கு லண்டனில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19வயது இளைஞர் ஒருவர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × two =

*