;
Athirady Tamil News

ஆசிரியர்களிற்கான துப்பாக்கி சுடும் பயிற்சி வகுப்பில் நடந்த விபரீதம்!மூவர் காயம்…!!

0

அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் துப்பாக்கி தாக்குதலை அடுத்து மாணவர்களின் பாதுகாப்பிற்காக ஆசிரியர்கள் துப்பாக்கி பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் அவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து கலிபோர்னியாவில் உள்ள ஒரு பள்ளியில் துப்பாக்கி சுடும் பயிற்சி வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஒரு ஆசிரியர் வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்தது. ஆனால் துப்பாக்கி மேற்கூரையை நோக்கி சுட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் மேற்கூரையின் ஒரு பகுதி கீழே விழுந்ததில் 3 பேர் காயமடைந்துள்ளனர். மாணவர்கள் பாதுகாப்புக்காக நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் இவ்வாறு விபத்து நடந்தது அங்கு அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*