;
Athirady Tamil News

குடும்பச் செலவுகள் தொடர்பான ஆய்வு ஏப்ரல் மாதம் வரை முன்னெடுக்கப்படும்…!!

0

சிங்கப்பூர் குடும்பங்களின் வருமானம் மற்றும் செலவுகள் தொடர்பாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சிங்கப்பூர் குடும்பங்களின் வருமானம் மற்றும் செலவுகள் ஆகியவை தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் ஆய்வு நடவடிக்கை இப்போது முதல் ஏப்ரல் மாதம் வரை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புக்கிட் பாத்தோக், புக்கிட் பாஞ்சாங், புக்கிட் தீமா, கிளமெண்டி, கேலாங், காலாங், மண்டாய், நொவினா, செம்பவாங், செங்காங், தெம்பனிஸ், தங்ளின் மற்றும் யீஷூன் ஆகிய வட்டாரங்களில் வசிக்கும் குடும்பங்கள் இந்த ஆய்வில் உள்வாங்கப்பட்டுள்ளன.

குடும்பச் செலவுகள் ஆய்வில் சேகரிக்கப்படும் தகவல்கள் வாடிக்கையாளர் விலைக் குறியீட்டைத் தொகுப்பதற்குப் பயன்படுத்தப்படும் என்று சிங்கப்பூர் புள்ளிவிபரத் துறை தெரிவித்தது. ஆய்வு நடத்தும் அதிகாரிகள் அனைவரும் அதற்குரிய அடையாள அட்டைகளை வைத்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × four =

*