;
Athirady Tamil News

லிபியாவில் ஆட்கடத்தல் தொடர்பில் 205 பேருக்கு பிடியானை…!!

0

ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு உதவி புரிதல் போன்ற குற்றச்சாட்டுக்களுடன் தொடிடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் சுமார் 205 பேருக்கு லிபிய அரசு பிடியானையை பிறப்பித்துள்ளது.

லிபியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக ஆட்கடத்தல் , சித்திரவதை செய்தல். கொலை மற்றும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

உள்நாடுகளில் நிலவி வரும் யுத்தங்கள் மற்றும் வரட்சி காரணமாக ஐரோப்பாவிற்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வகையில் காணப்படுகிறது.

இவ்வாறு ஐரோப்பாவிற்கு பயணத்தை மேற்கொள்ளும் குடியேற்றவாசிகளுக்கு லிபிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக காணப்படுகிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு லிபியாவில் முகம்மர் கடாஃபியின் ஆட்சி முடிவுக்கு வந்ததில் இருந்து அங்கு அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதுடன், அரசு ஸ்திரத்தன்மை இன்றி காணப்படுகிறது.

இதனை பயன்படுத்தி பலர் சட்ட விரோதமாக ஐரோப்பாவிற்கு பயணத்தை மேற்கொள்கின்றதுடன், இந்த செயன் முறை ஒரு வலைப்பின்னாகவே பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரிலேயே லிபியா குறித்த 205 பேருக்கு எதிராக பிடியானை பிறப்பித்துள்ளது.

இதேவேளை, குறித்த நபர்களுக்கும், ஐ.எஸ் ஆயுததாரிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற ரீதியில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − four =

*