;
Athirady Tamil News

வருடப் பிறப்பன்று கையடக்க தொலைபேசி பாவனைக்கு தடை விதிக்க முடிவு…!!

0

பாலி தீவில் கொண்டாடப்படவுள்ள புதுவருடத்தை முன்னிட்டு கையடக்கத் தொலைபேசிகளுக்கான தொடர்பை துண்டிப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடி தீர்மானத்தை எடுத்துள்ளது.

அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்திற்கு அந்நாட்டு தொலைபேசி சேவைகளை வழங்கிவரும் நிறுவனங்களும் இணக்கம் வெளியிட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கலாசார செயற்பாடுகள் அதிகமாக பின்பற்றப்பட்டு வருகின்ற பாலி தீவில், ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகின்ற இந்து புதுவருடப் பிறப்பை கையடக்கத் தொலைபேசி பாவனை மிகவும் பாதிக்கச் செய்வதாக அந்நாட்டு அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை பாலி அரசாங்கத்தின் இந்த அதிரடி தீர்மானம் மீது ஏனைய நாடுகளின் கவனம் திரும்பியிருக்கின்ற நிலையில் நேர் எதிர் விமர்சனங்களும் தற்போது கிளம்பியிருக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − eleven =

*