;
Athirady Tamil News

அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி – அசத்தும் திருமா பயிலகம்…!!

0

ஆண்டாண்டு காலமாய் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் எண்ணற்ற இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு சமூகத்தின் தாழ்தளத்தில் கிடக்கிற மக்களை சமூக – பொருளாதார ரீதியாக உயர்த்திட அவர்களுக்கு கல்வியை அளிப்பது இன்றியமையாதது என புரட்சியாளர் அம்பேத்கர் அசைக்கவியலாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

அத்தகைய பேராசானின் வழி நடைபோடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமா பயிலகம் சார்பில், அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு சென்னையில் நடத்தப்பட்டுவருகிறது.

சென்னை, அசோக்நகர், அம்பேத்கர் திடலில் இயங்கிவரும் ‘திருமா பயிலகத்தின்’ மூலம் அரசு வேலைவாய்ப்புக்கான பயிற்சி வகுப்புகளைக் கட்டணமின்றி கடந்த சில ஆண்டுகளாக வழங்கிவருகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இந்த பயிலகத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பலர் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

தற்போது, திருமா பயிலகத்தின் சார்பில் TNPSC-Gr(II), RRB, SI தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும், பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மத்திய பல்கலைக்கழகங்களின் நுழைவுத்தேர்விற்கான (CUCET) பயிற்சி வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்புவோர் கீழ்க்கண்ட அலைபேசி எண்கள், மின்னஞ்சல் ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

சென்னை – தொடர்புக்கு: 8610392275, 9042991182, 9566065523

மின்னஞ்சல் :thirumapayilagam@gmail.com

ஜெயங்கொண்டம் – தொடர்புக்கு: 9952860844, 9865936454.

மின்னஞ்சல் :thirumapayilagam@gmail.com

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + 9 =

*