;
Athirady Tamil News

என் மனைவிக்கு நான் இரண்டாவது கணவரா? அதிர்ச்சியில் ஷமி..!!

0

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி தன்னுடைய மனைவி ஹாசின் ஜகானுக்கு, தான் இரண்டாவது கணவர் என்பதே இப்பொழுது தான் தெரியும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகம்மது ஷமியின் மீது கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சமியின் மனைவி ஹாசின் ஜகான், சமிக்கு அதிக பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அதனை தட்டி கேட்டதால் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் கொல்கத்தா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கொல்கத்தா காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கிரிக்கெட் வட்டாரத்தில் ஷமியின் விவகாரம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ஹாசின் ஜகானுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ள ரகசியம் வெளியாகியுள்ளது. கடந்த 2002ல் மேற்கு வங்கத்தின் சபியுதீன் என்பவரை ஹாசன் ஜகான் திருமணம் செய்து, பின்னர் 2010-ல் விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு 3 மற்றும் 5 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். ஷமியை 2014ல் திருமணம் செய்த பின் இரு மகள்களையும் தன்னுடைய முதல் கணவரிடம் ஒப்படைத்துள்ளார் ஹாசின்.

தற்போது ஷமி மற்றும் அவரது மனைவி ஹாசினுக்கும் இடையில் நடைபெறும் பிரச்சனை குறித்து ஹாசின் ஜகானின் முன்னாள் கணவர் சைஃபுதீன் மவுனம் கலைத்து பேசுகையில், முகமது ‌ஷமி மற்றும் ஹாசின் ஜகான் இணைந்து வாழ வேண்டும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து மிகவும் அதிர்ச்சியடைந்துள்ள கிரிக்கெட் வீரர் ஷமி, “எனக்கும், ஹாசின் ஜகானுக்கும் நடந்தது இரண்டாவது திருமணம் என்பது எனக்கு தெரியாது. எங்களுக்கு திருமணம் நடைபெற்ற பின்னர் இரண்டு குழந்தைகள் பற்றி தெரிவிக்கப்பட்டது. இரு பெண் குழந்தைகளும் என்னுடைய தங்கையின் குழந்தைகள் என்றே ஹாசின் ஜகான் கூறினார் என மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + 5 =

*