;
Athirady Tamil News

யோகியை விளாசும் சு.சாமி – இது பாஜக அட்ராசிட்டீஸ்…!!

0

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், புல்பூர் லோக்சபா தொகுதி மற்றும் பீகார் இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வியைத் தழுவியிருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நாடு முழுக்க பெரும்பான்மையான மாநிலங்களில் ஆட்சியிலுள்ள ஒரு கட்சி இடைத்தேர்தலில் தோற்பது, அதன் அழிவிற்கான துவக்கமென பாஜகவை விமர்சித்திருந்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா.

இந்நிலையில், தங்களது சொந்த தொகுதியில் பாஜகவை ஜெயிக்க வைக்க முடியாதவர்களுக்கு அமைச்சர்கள் பதவி கொடுப்பது பற்றி பாஜக ஆட்சி மன்றக் குழு நிச்சயம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உத்திர பிரதேச முதல்வர் யோகியை சாடியுள்ளார்.

மற்றுமோர் பாஜக மூத்த தலைவர் ராம்காந்த் யாதவ் கூறுகையில், வழிபாடுகளில் கவனம் செலுத்துகிறவர்களை முதல்வராக்கி இருக்கிறோம். ஒரு அரசாங்கம் என்பது அனைவருக்கும் பொதுவானது. ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டுமே அரசாங்கம் சொந்தம் அல்ல என யோகியை விமர்சித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*