;
Athirady Tamil News

முன்னாள் ஜேம்ஸ் பாண்டை ஏமாற்றிய இந்திய நிறுவனம்…!!

0

இந்திய நிறுவனம் ஒன்று தன்னை ஏமாற்றி விட்டதாக ஜேம்ஸ் பாண்டாக நடித்த பியர்ஸ் ப்ரொஸ்னன் இந்திய அதிகாரிகளிடம் குற்றஞ்சாட்டி உள்ளார்.

பான் பஹார் எனும் புகையிலை விளம்பரத்தில் பியர்ஸ் நடித்து இருந்தார். இந்த நிலையில் இந்திய சட்டமொன்று புகையிலை விளம்பரங்களை தடை செய்துள்ளது.

இதனையடுத்து புகையிலை உட்கொள்வதை ஊக்குவிக்கும் விளம்பரத்தில் நடித்தது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

பியர்ஸுக்கும் அந்த நிறுவனத்துக்குமான ஒப்பந்தம் முடிந்துவிட்டது என்றும், இனி வரும் காலங்களில் இது போன்ற விளம்பரத்திற்கு எதிரான முயற்சிகளில் தானும் உதவுவதாக பியர்ஸ் எழுத்து வடிவத்தில் கொடுத்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டதாக டெல்லி சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த விளம்பரம் வெளியான 2016 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பலர் பியர்ஸ் எப்படி இதுமாதிரியான விளம்பரங்களில் நடிக்கலாம் என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 9 =

*