;
Athirady Tamil News

நள்ளிரவில் திறந்து கிடந்த வீட்டின் கதவு: தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!!

0

தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூபாலன், திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையத்தில் தன்னுடைய மனைவி நதியா மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

நேற்று பூபாலன் வழக்கம் போல தன்னுடைய பின்னலாடை நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் அவரது மனைவி தன் இரண்டு குழந்தைகளுடன் தனியாகவே இருந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நள்ளரவு நேரத்தில் பூபாலனின் வீட்டின் கதவுகள் திறந்து கிடந்ததை அவரின் சகோதரர் ஜீவா பார்த்துள்ளார், இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சியடைந்தார்.

ஏனெனில் வீட்டின் உள் அறைக்குள் நதியா கொடூரமாக கொலைசெய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்திருக்கிறார்.

உடனடியாக இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின் பொலிசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பணம், நகை போன்றவை திருடப்படவில்லை தெரியவந்துள்ளதால், இந்த கொலை என்ன காரணத்திற்காக நடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 5 =

*