;
Athirady Tamil News

107 பயணிகளுடன் அமெரிக்கா விமானம் காணாமல் போன நாள்- மார்ச் 16- 1962..!!

0

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விமானம் 107 பயணிகளுடன் மேற்கு பசிபிக் பெருங்கடலில் சென்றபோது காணாமல் போனது.

இதே தேதியில் நிகழ்ந்து முக்கிய நிகழ்வுகள்:-

* 1926 – முதலாவது திரவ- எரிபொருளினால் உந்தும் ஏவுகணையை மசாசுசெட்சில் ராபர்ட் கொடார்ட் என்பவர் செலுத்தினார். * 1939 – பிராக் அரண்மனையில் இருந்து ஹிட்லர் பெஹேமியா, மொராவியாவை ஜெர்மனியின் ஒரு பகுதியாக அறிவித்தார். * 1942 – முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது (ஏவப்பட்ட உடனேயே வெடித்துச் சிதறியது). * 1945 – இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்தது. * 1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 20-நிமிடக் குண்டுவீச்சில் ஜெர்மனியின் வூர்ஸ்பேர்க் நகரின் 90 விழுக்காடு அழிந்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர்.

* 1963 – பாலியில் ஆகூங்க் மலை நெருப்பு கக்கி 11,000 பேர் வரை இறந்தனர். * 1966 – ஜெமினி 8, நாசாவின் 12-வது மனிதரைக் கொண்டு சென்ற விண்கலம், ஏவப்பட்டது. * 1968 – வியட்நாம் போர்: மை லாய் என்ற இடத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள் அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். * 1969 – வெனிசுவேலாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.

* 1985 – அசோசியேட்டட் பிரஸ் ஊடகவியலாளர் டெரி ஆன்டர்சன் பெய்ரூட் நகரில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் டிசம்பர் 4, 1991-ல் விடுதலை ஆனார். * 1988 – ஈராக்கில் குருதிய நகரான ஹலப்ஜாவில் நச்சு வாயுத் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். * 2006 – மனித உரிமைகளுக்கான ஐ.நா. அமைப்பை உருவாக்குவதற்கு ஐ.நா.வின் பொதுச்சபை ஆதரவாக வாக்களித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − four =

*