;
Athirady Tamil News

வெலிகம கப்ரதொட்ட பாலத்திற்கு அருகில் விபத்து : இருவர் உயிரிழப்பு…!!

0

வெலிகம கப்ரதொட்ட பாலத்திற்கு அருகில் நேற்றையதினம்(15-03-2018) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மாத்தறையில் இருந்து காலி நோக்கி சென்ற டிப்பர் ஒன்றும் கொழும்பில் இருந்து வெலிகம நோக்கி வந்த கார் ஒன்றும் வெலிகம கப்ரதொட்ட பாலத்திற்கு அருகில் நேருக்கு நேர் மோதியதில் காரில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் கல்கிஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய என்.தனுஸ்க கவிஸால்,மற்றும் இரத்மலான பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய நவோத் பண்டார மீகல்ல ஆகியோர் உயிரிழந்துள்ளனா்.

இச்சம்பவத்தின் போது உயிரிழந்தவர்கள் விருந்து ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில் அவா்கள் மதுபோதையில் இருந்திருக்கலாம் என வெலிகம பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனா்.

சடலம் வலான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த விபத்தினை ஏற்படுத்திய டிப்பா் சாரதி வெலிகம பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 10 =

*