;
Athirady Tamil News

மேஜர் அஜித் பிரசன்னவிற்கு எதிராக முறைப்பாடு…!!

0

கண்டி மாவட்டத்தில் முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறைகளுடன் பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானாசார தேரருக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்த மற்றுமொரு சிங்கள பேரினவாத அமைப்பின் தலைவரான மேஜர் அஜித் பிரசன்னவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஞானாசார தேரர் நாட்டில் இல்லாததால் அவர் சார்பில் அவரது சட்டத்தரணிகள் பொலிஸ் மா அதிபரிடமும் ஸ்ரீலங்கா சட்டத்தரணிகள் சங்கத்திடமும் இந்த முறைப்பாட்டை பதிவுசெய்திருக்கின்றனர்.

நாட்டை மீட்ட படையினரை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விசுவாசியுமான மேஜர் அஜித் பிரசன்ன கடந்தவாரம் வெளியிட்டிருந்த காணொளிப் பதிவொன்றில் கண்டி வன்முறைகளுக்கு, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரருக்கு நேரடி தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

(நாம் கண்டோம் கலகொட அத்தே ஞானாசார தேரரும் திகனயில் கொல்லப்பட்ட சிங்கள சாரதியின் இறுதிக் கிரியைகளுக்கு சென்றிருந்தார். அதனை நாம் கண்டோம். அதேவேளை தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு சென்றும், வேறு இடங்களுக்கு சென்றும் கத்தி மிரட்டியுள்ளார். அதேபோல் மக்களை தூண்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இதனாலேயே மக்கள் குழப்பமடைந்து தாக்குதல் நடத்தி சொத்துகளுக்கு தீ வைத்தனர். ஆனால் கலகொடஅத்தே ஞரனாசார தேரரை கைதுசெய்வதில்லை.

ஏன் அது. ஞானாசார தேரர் என்பவர் சம்பிக்க ரணவக்க ராஜித்த சேனாரத்ன ஆகிய அமைச்சர்களால் ஆட்டுவிக்கப்படும் ஒரு பொம்மை. அதேபோல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளை. மஹிந்த ராஜபக்சவிற்கு முஸ்லீம்களின் வாக்குகளை கிடைக்காது செய்வதற்காக ரணில் பயன்படுத்தும் செல்லப்பிள்ளையே ஞானாசார தேரர்.

அதுதான் உண்மை. கலகொடஅத்தே ஞானாசார தேரர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி மற்றுமொரு வாகனத்தை மோதிய ஒருவர். இந்தக் குற்றத்தை அவர் கொழும்பு போக்குவரத்து நீதிமன்றில் ஏற்றுக்கொண்டும் உள்ளார்.

இதனால் நான் அவரை பௌத்த பிக்குவாக மதிப்பதே இல்லை. குடிபோதையில் வாகனத்தை ஓட்டுவரானால் அந்த நபர் முதலில் காவி உடையை கழட்டிவிட்டு பௌத்த சாசனத்திலிருந்து வெளியேற வேண்டும். எந்த அடிப்படையில் அவர் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டி மற்றுமொரு வாகனத்துடன் மோதுவது. நீதிமன்றக் கூண்டில் ஏறி தனது தவறை ஏற்றுக்கொண்டு அதற்காக தண்டனையும் பெற்றுக்கொண்ட ஒரு நபர் இவ்வாறு பௌத்த பிக்குவாக இருப்பது.

அதனை எவ்வாறு அனுமதிப்பது. ஆனால் சிங்கள பௌத்தர்கள் என்று அழைத்துக்கொள்ளும் எமது கபட நரிகள் சிலர் இந்த குடிகாரனை கண்டதும் மண்டியிட்டு வணங்குகின்றனர். )

சட்டத்தரணியாக கடமையாற்றும் அஜித் பிரசன்ன உண்மைக்குப் புறம்பான பொய் பிரசாரமொன்றை மேற்கொண்டுள்ளதாகவும் இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானாசார தேரருக்கு தனது முறைப்பாட்டில் தெரிவித்திருக்கின்றார்.

அதேவேளை இவ்வாறான பொய்பிரசாரங்களை மேற்கொள்ளும் ஒரு நபரை சட்டத்தரணியாக தொடர்ந்தும் கடமையாற்ற இடமளிப்பது குறித்தும் தீர்மானமொன்றை சட்டத்தரணிகள் சங்கமும் எடுக் வேண்டும் என்றும் பொதுபல சேனா பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 1 =

*