;
Athirady Tamil News

ரணிலுக்கு எதிரான பிரேரணையில் கையெழுத்து திரட்டும் பணி இன்று முதல்..!!

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படுகின்றது.

இந்தப் பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெறும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது.

14 அம்சங்களை அடிப்படையாக வைத்து இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது.

எதிர்வரும் 21ஆம் திகதி அல்லது 22ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்புபட்டிருப்பதாக வெளியான தகவல்கள் மற்றும் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆளுங்கட்சியின் முக்கிய பங்காளியான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கொண்ட தோல்வி உள்ளிட்ட பல விடயங்கள் காரணமாக பிரதமர் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்திருப்பதாக ஒன்றிணைந்த எதிரணி சுட்டிக்காட்டுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × four =

*