;
Athirady Tamil News

அவசர காலச்சட்டம் நீக்கப்படுமா? இறுதித் தீர்மானம் நாளை…!!

0

கண்டி வன்முறையை அடுத்து தற்காலிகமாக அமுலுக்கு கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம் மீதான தீர்மானம் பெரும்பாலும் இன்று அல்லது நாளை எடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு சென்றுள்ள நிலையில் அவர் இன்று வெள்ளிக்கிழமை நாடு திரும்பவிருக்கின்றார்.

அவசரகாலச் சட்டத்தை நீக்குவதா? இல்லையா? என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் ஜனாதிபதி நாடு திரும்பியதும் எடுக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய ஜனாதிபதி நாடு திரும்பியதும் பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவிருப்பதாக அரச உயர்மட்ட தகவல்கள் கூறுகின்றன.

இந்தக் கலந்துரையாடலில் அவசர காலச் சட்டம் தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்பதோடு நடப்பு அரசியல் விவகாரம் பற்றியும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை அமுலில் உள்ள அவசர காலச் சட்டத்தை தற்போதைக்கு நீக்கவேண்டாம் என்று பாதுகாப்புப் பிரிவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு சபையின் பிரதானிகள் பங்கெடுப்புடன் வாராந்தம் இடம்பெறும் பாதுகாப்பு மீளாய்வுக் கூட்டத்தில் வைத்து இந்த வேண்டுகோளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் பாதுகாப்புப் பிரிவு விடுத்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை தொடர்பான விசாரணைகள் 70 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் எஞ்சியுள்ள விசாரணைகளையும் துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமரிடம் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − fourteen =

*