;
Athirady Tamil News

கிராமிய மட்டங்களில் வழங்கப்படவிருக்கும் புதிய வேலை வாய்ப்புக்கள்; பிரதமர் உறுதி…!!

0

கிராமிய மட்டங்களில் பரந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் பண்டிகைக் காலத்தைத் தொடர்ந்து கிராமிய மக்களின் அபிவிருத்திக்காகவே இந்த வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்கப்போவதாக அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் கேகாலையில் இடம்பெற்ற சமய நிகழ்ச்சியொன்றில் உரையாற்றியபோது இந்த விடயத்தினைக் குறிப்பிட்ட அவர், கிராமிய மட்டத்தில் வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

”1970 ஆம் ஆண்டுகளில் இலங்கையை விட ஆகக்குறைந்த அபிவிருத்தி மட்டத்தில் இருந்த சிங்கப்பூர், மலேசியா முதலான நாடுகள் இலங்கையைத் தாண்டிச் சென்றுள்ளன. கடந்த 40 வருடங்களை கருத்திற்கொண்டால் 30 வருட கால யுத்தத்தையும் சமாளித்துக் கொண்டு இலங்கை ஓரளவு அபிவிருத்தி கண்டுள்ளது.” என்றார்.

கிராமப்புற மக்கள் மத்தியில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன என குறிப்பிட்ட அவர், இந்த இடைவெளியைக் குறைப்பதற்கு பரந்த வேலைத்திட்டம் அமுலாக்கப்படுமென உறுதியளித்தார்.

இதேவேளை, இலங்கை வாழ் பௌத்தர்கள் மற்ற மதத்தவர்களை மதித்து, அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியதோடு, அவ்வாறு நடக்கவில்லையெனில் கடந்த கால அசம்பாவிதங்கள் மீண்டும் தலைதூக்குவதைத் தவிர்க்க முடியாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + eighteen =

*