;
Athirady Tamil News

வடமாகாண விவசாய அமைச்சினால் விவசாயிகளுக்கு 13.5 மில்லியன் ரூபாய் மானியம் வழங்கி வைப்பு..!! (படங்கள்)

0

வடமாகாண விவசாய அமைச்சினால் வவுனியா விவசாயிகளுக்கு 13.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான விவசாய மானியம் வழங்கி வைப்பு

வடமாகாண விவசாய அமைச்சினால் வவுனியா விவசாயிகளுக்கு 13.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான விவசாய உபகரணங்கள் மானியமாக வழங்கப்பட்டது.

வவுனியா, தாண்டிக்குளம் விவசாய பண்ணையில் உதவி விவசாய பணிப்பாளர் த.யோகேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

உலக உணவுஇ விவசாய ஸ்தாபனத்தின் உதவியுடன் 13.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான விவசாய உபகரணங்கள் வடமாகாண விவசாய அமைச்சினால் வவுனியா மாவட்டத்தைச் சோந்த 214 விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

நீர் இறைக்கும் இயந்திரம், நீர் விநிநோயக குழாய்கள், முட்கம்பிகள் என பல்வேறு வகையான விவசாய உபகரங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது. இதில் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ம.தியாகராசா, இ.இந்திராசா, வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் க.சத்தியசீலன், வடமாகாண விவசாய பணிப்பாளர், விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × three =

*