;
Athirady Tamil News

காலஞ்சென்ற பிரபல விஞ்ஞானி ‘ஸ்டிபன் காக்கிங்’க்கு வவுனியாவில் அஞ்சலி நிகழ்வு…!! (படங்கள்)

0

காலஞ்சென்ற (14-03) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டிபன் காக்கிங் அவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தலைமையில் இன்று (16) அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் மற்றும் வளாகத்தின் ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இவ் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றிருந்தது.

விஞ்ஞானி ஸ்டிபன் காக்கிங் அவர்களின் திரு உருவப்படத்திற்கு வளாகத்தின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் ஊழியர்களினால் விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் விரிவுரையாளர் ரி.கார்த்தீஸ்வரன், வவுனியா வளாக ஊழியர் சங்கத்தலைவர் கெ.பூங்கண்ணன், விரிவுரையாளர் திருமதி எஸ்.சுபாசனா, சிரேஸ்ட உதவி நூலகர் எஸ்.சண்முகதாசன் மற்றும் வளாகத்தின் ஆசிரியர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + sixteen =

*