;
Athirady Tamil News

சிங்கள குடியேற்றம் மூலம் சிறுபான்மையினர் மேலும் சிறுபான்மையாக்கப்படுகின்றனர்..!!

0

தமிழர் தாயகப்பகுதிகளில் மேறகொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்களின் ஊடாக சிறுபான்மையினரை, மேலும் சிறுபான்மையாக்க அரசாங்கம் முயற்சிப்பதாக வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்தார்.

வடமாகாணத்தின் வளமான பகுதிகளை அபிவிருத்தி செய்து அங்கு தமிழர்களை குடியேற்றுவதன் மூலம் சிங்கள குடியேற்றத்தை தடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட 207 பயனாளிகளுக்கான விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை, ஒட்டுசுட்டான் விவசாய பயிற்ச்சி நிலையத்தில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன்,

முல்லைத்தீவு மக்கள் மிக நீண்ட காலமாக தமது சொந்த இடங்களில் சொத்துக்களை இழந்து வாழ்ந்து வரும் நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை விவசாயத்தின் ஊடாக முன்னேற்ற வேண்டும் என குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + 14 =

*