;
Athirady Tamil News

8 வருட காலம் சிறைவாசம் அனுபவித்த விவசாயி சடலமாக மீட்பு…!!

0

ஊவா பரணகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகல்ல மெதகம பிரதேசத்திலுள்ள விவசாய நிலமொன்றில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பு ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த விவசாயி ஒருவரின் சடலமொன்றினை 16.03.2018 அன்று காலை 10 மணியளவில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 71 வயதுடைய கே.பீ.டிம். டிக்கிரி பண்டா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் தாம் விவசாயம் செய்யும் விவசாய நிலத்தில் உள்ள குடியிருப்பில் உறங்கியவாறு இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஊவா பரணகம – வெவேகம பகுதியை சேர்ந்த குறித்த விவசாயி கொலை குற்றவாளியாக 08 வருட காலம் சிறையில் இருந்துள்ளதாகவும், பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிமடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மரண விசாரணையும், பிரேத பரிசோதனையும் முடிந்தபின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊவா பரணகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 7 =

*