;
Athirady Tamil News

ஈழத் தமிழ் இலக்கிய வரலாறு வெளிவர வேண்டும்…!!

0

தமிழகத்தினுடைய இலக்கிய வரலாற்றினை ‘தமிழ் இலக்கிய வரலாறு’ எடுத்துரைப்பதைப் போன்று ஈழத்து இலக்கிய வரலாற்றினை எடுத்துக்கூறுவதற்கு ஈழத்தமிழ்க் கவிதைக் களஞ்சியம் உறுதுணையாக உள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனால் ஈழத் தமிழ் இலக்கிய வரலாறு விரைவில் வெளிவர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சிய நூல் வெளியீட்டு விழா நேற்று வியாழக்கிழமை மாலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சைவப் புலவர் செல்லத்துரை, வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ், பேராசிரியை மனோன்மணி சண்முகதாஸ், கவிஞர் சோ.பத்மநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர், முஸ்லீம் கவிஞர்களின் படைப்புக்களும் தமிழை வளர்ப்பதற்கு கடந்த காலங்களில் பாரிய பங்காற்றியதாக சுட்டிக்காட்டினார்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், இலங்கையில் அகழ்வாராட்சி பணிகளின் போது தமிழர்களின் தொன்மையை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + 8 =

*