;
Athirady Tamil News

அமெரிக்க ராணுவ விமானம் ஈராக்கில் விழுந்து நொறுங்கியது – 7 பேர் கதி என்ன?..!!!

0

சிரியா – ஈராக் எல்லையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்க கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் ராணுவ விமானம் ஒன்று ஈராக் நாட்டின் மேற்கில் உள்ள அல்-காம் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த ஏழு பேரின் நிலைமை குறித்த கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். #Tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*