;
Athirady Tamil News

சிரியாவில் ரஷ்ய படையினர் நடத்திய விமான தாக்குதலில் 12 பேர் பலி..!!

0

சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிப்பதில் ரஷ்யாவும் இணைந்து செயல்படுகிறது. இதுபோன்ற தாக்குதல்களில் சில சமயம் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிரியாவில் ரஷ்யாவின் விமான படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 12 பேர் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, பிரிட்டனை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகையில், சிரியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கூட்டா நகரில் கர்-பட்னா கிராமத்தில் ரஷ்யாவின் விமானப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 4 =

*