;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தானில் 7 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பிணைக்கைதி..!!

0

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லையில் பக்திகா மாகாணம் உள்ளது. இது தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி.

நேற்று முன்தினம் அங்கு காரில் சென்ற அவால் கான் (36) மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியை தலிபான் பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து கடத்தி சென்றனர். வழியில் போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற அவர்கள் அவால்கானை மட்டும் கோமல் மாவட்டத்தில் உள்ள தங்களது பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு சில மணிநேரம் அவரை அடைத்து வைத்திருந்தனர்.

அப்போது மதியநேர தொழுகையில் பயங்கரவாதிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிணைக்கைதி அவால்கான் ஒரு பயங்கரவாதியின் துப்பாக்கியை பறித்து சரமாரியாக சுட்டார்.

அதில் 7 பயங்கரவாதிகள் அதே இடத்தில் குண்டு பாய்ந்து பலியாகினர். 18 பேர் காயம் அடைந்தனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

இச்சம்பவத்தை பயன்படுத்தி அவால் கான் அங்கிருந்து தப்பினார். இத்தகவலை பக்திகா மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் முகமது ரஹ்மான் அயாஷ் தெரிவித்தார்.

இதை தலிபான் பயங்கரவாதிகள் செய்தி தொடர்பாளர் ‌ஷபிபுல்லா முஜாகித்தும் உறுதி செய்துள்ளார். 2 பேரை கடத்தி பிணைக் கைதிகளாக்கியதும், அவர்களில் அவால் கான் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் பலியானதாகவும் கூறியுள்ளார். #Tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × two =

*