;
Athirady Tamil News

கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்..!! (வீடியோ)

0

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த மாதம் 29-ம் தேதி சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நான்கு முறை அவரை விசாரிக்க பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தது. டெல்லியில் தீவிரமாக விசாரிக்கப்பட்ட கார்த்தியை மும்பை அழைத்துச் சென்றும் சி.பி.ஐ விசாரித்தது.

இதனை அடுத்து, தற்போது அவர் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என அவர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவர் ஜாமீனில் வெளியே வந்தால் அவருக்கு எதிரான ஆதாரங்களை அழித்து விடுவார் என ஜாமீனுக்கு சி.பி.ஐ எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது. கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “கார்த்தி வெளியே வந்தால் ஆதாரங்களை அழித்து விடுவார் என சி.பி.ஐ சொல்வதை நிரூபிக்கட்டும். இந்த ஜாமீன் மனுவையே நாங்கள் திரும்பப்பெற்றுக்கொள்கிறோம்” என வாதிட்டார்.

சி.பி.ஐ சார்பில் கூடுதல் சொசிலிட்டர் ஜெனரல் தஷ்கர் மேஹ்தா ஆஜராகி ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − three =

*