;
Athirady Tamil News

சிரியாவில் பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்தவே ரஷியா ஆதரவு..!!

0

சென்னையில் ரஷிய தூதர் செர்ஜி எல்.கோட்டாவ், துணை தூதர் கிரவ்சென்கோ ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிரியாவில் உள்ள ஐ.எஸ்., ஜபாத் அல் நுஸ்ரா, அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்தவே ரஷியா ஆதரவு அளித்துவருகிறது. குறிப்பாக சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ரஷிய விமானப்படை உதவியுடன் சிரியா நாட்டு படைகள் போரிட்டு வருகின்றன.

சிரியாவில் பொதுமக்களை பயங்கரவாதிகள் பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள். ரஷியாவின் சார்பில் சிரியாவில் இருந்து இதுவரை 11 ஆயிரம் முதல் 13 ஆயிரம் பேரை பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றி இருக்கிறோம். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு டாக்டர்கள் குழு, மருந்து, உணவுகள் அனுப்பப்பட்டு இருக்கிறது.

சிரியாவில் பயங்கரவாதிகளை அழிக்க ரஷியா ரசாயன குண்டுகளை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டுகிறார்கள். நாங்கள் எப்போதும் ரசாயன குண்டுகளை பயன்படுத்தமாட்டோம். இதை புரிந்துகொள்ளாமல் சில அமைப்புகள் ரஷியாவுக்கு எதிராக குரல் எழுப்புகின்றன. சமூக வலைதளங்களில் திட்டமிட்டு தவறான தகவல்கள் பரவுகிறது.

ரஷியாவின் அதிகாரப்பூர்வ செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. வேண்டும் என்றே ரஷியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே கலகத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். இதை புரிந்துகொள்ளாமல் சில அமைப்புகள் தமிழகத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி, கடந்த 2-ந்தேதி ரஷிய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தின. பல்வேறு இடங்களிலும் இதுதொடர்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் ரஷியாவின் நிலைப்பாட்டை புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம். சிரியாவின் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வுகாண்பதற்கே ரஷியா உதவி வருகிறது.

ரஷியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. தென்னிந்தியாவில் இருந்து 1,256 பேர் விசா பெற்று ரஷியா சென்றிருக்கிறார்கள். பெரும்பாலானோர் மருத்துவ படிப்புக்காக சென்றுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 2 =

*