;
Athirady Tamil News

சட்டவிரோத மதுபாவனையினை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட மகயர் கையளிப்பு…!!

0

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்து செல்லும் சட்டவிரோத மதுபாவனையினை கட்டுப்படுத்துமாறு கோரி மனு ஒன்றினை நலன் விரும்பிகள் மாவட்ட அரசாங்க அதிபரிடமும், பொலீஸ் அதிகாரியிடமும் கையளித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம்(16-03-2018) இடம்பெற்ற மகளீர் தின நிகழ்வின் போது முல்லைத்தீவு மாவட்டதினை சேர்ந்த நலன் விரும்பிகள் மற்றும் கிராம மக்கள் இணைந்து கையெழுத்திட்ட மனு ஒன்றினை கையளித்துள்ளார்கள்.

அவர்கள் கையளித்த மனுவில்……

முல்லைத்தீவு மாவட்டத்தில் மது உற்பத்தி மற்றும் அதிகரித்த பாவனைகளால் சிறுவர்கள் பெண்கள் என சமூகத்தில் வாழும் அனைவரும் அண்மித்த காலங்களில் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரையில் வன்முறைமிக்க மற்றும் சமூகப்பிரச்சனைகளின் தூண்டியாக மது பாவனை அமைந்துள்ளது.

சட்டவிரோத மதுவிற்காக ஏங்கி நிற்கும் அனேக கழுகுகளை கிராமங்களில் காண்பது நாம் அனைவரும் வேதனையுடன் அவதானிக்கும் ஒருவிடயமாகும். நாளுக்கு நாள் வீட்டு வன்முறைகளும் பாடசாலை இடைவிலகல்களும் துஸ்பிரயோகங்களும் அதிகரித்துக்கொண்டே வருவதுடன் இதனால் சமூகத்தில் வாழ்கின்ற அனைவரும் பலதரப்பட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ளது.

சட்டவிரோத மது உற்பத்திகளை தடுப்பதற்காக சட்டங்கள் மூலம் பலமுயற்சிகள் எடுக்கப்பட்டாலும் கிராமமட்டங்களில் மதுபோதைக்கு எதிராக பல குழுக்கள் உருவாக்கப்பட்டாலும் முல்லைத்தீவு மாவட்டத்தினை பொறுத்தவரை மது உற்பத்தியாளர்கள் குறைந்த பாடில்லை.

வன்முறைகள் துஸ்பிரயோகங்கள் உடல் உள தாக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இருந்து சிறுவர்கள் பெண்கள் மற்றும் ஆண்கள் பாதுகாக்ப்பட்டு மகிழ்ச்சியாக வாழ்வதற்காக சட்டவிரோத மது உற்பத்தி செய்யும் நபர்களுக்கும் போதைவஸ்து வினியோகம் செய்பவர்களுக்கும் எதிராக முறையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதோடு கல்வி கற்கவேண்டிய வயதிலும் சாதிக்கவேண்டிய வயதிலும் போதைவஸ்த்துக்களுக்கு அடிமையாகி தவறான பாதையைநோக்கி சென்று கொண்டிருக்கும் இளம் சமுதாயத்தினை பாதுப்பாது சம்மந்தப்பட்ட அரச திணைக்களங்கள் அதிகாரிகள் மக்கள் போன்றோரின் பொறுப்பும் கடமையும் ஆகும்.

எனவே சட்டவிரோத மது உற்பத்தி மற்றும் பாவனையினை முற்றாக ஒழிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை விஸ்தீரணப்படுத்துமாறு கேட்டுக்கொள்வதுடன் சட்டவிரோ மது உற்பத்தி மற்றும் பாவனையால் சிறுவர்கள்,பெண்கள் மற்றும் ஆண்கள் எதிர்நோக்கும் பிரச்சனையினை குறைப்பதற்கு ஆவண செய்வோம் என்று தெரிவித்துள்ளதுடன், குடியுடன் கூடிய குடும்ப வன்முறைகள் மற்றும் கலாச்சார சீரழிவுகளில் இருந்து எமது சமூகத்தை பாதுகாப்பதற்கும் போதையற்ற வாழ்க்கையின் மகிமையினை அறியவைத்து எமது சமுதாயத்தை வளர்ச்சி பாதையில் இட்டுச்செல்லவும் தகுந்த நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று முல்லைத்தீவு மாவட்ட நலன்விரும்பிகள் கிராம மக்கள் முன்வைத்த மனுவில் தெரிவிக்கப்பபட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*