;
Athirady Tamil News

தெனியாய தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொள்ளை…!! (படங்கள்)

0

ஸ்ரீலங்காவின் தென்பகுதி பிரதேசமான மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பகுதியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஒரே நாளில் இரண்டு இடங்களில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த கொள்ளைச் சம்பவங்களால் தெனியாய விஹாரஹேன பிரதேசத்திலுள்ள பெட்னா தோட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளதாக எமது மாத்தறை மாவட்ட செய்தியாளர் தெரிவித்தார்.

சிங்கள மக்கள் செறிந்து வாழும் ஸ்ரீலங்காவின் தென்பகுதி பிரதேசமான மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பகுதியில் ஒருசில தமிழ் குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றனர்.இந்த குடும்பங்கள் தெனியாய பகுதியிலுள்ள பெருந்தோட்டங்களிலேயே மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெட்னா மற்றும் கொஸ்கொல தோட்டத்தின் தோட்ட களஞ்சிய அறையிலும், சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பொருட்களை திருடியுள்ளனர்.

கொஸ்கொல தோட்டத்தின் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு என வைக்கப்பட்டிருந்த திரிபோஷா சத்துமா பொதி திருடப்பட்டுள்ளது.

அதேவேளை நேற்று இரவூ 09.00 மணியளவில் விஹாரஹேன பெட்னா தோட்டத்தில் தோட்ட களஞ்சிய அறையில் காவலாளி இரவு உணவு உண்பதற்காக சென்ற நேரம் பார்த்து திருடர்கள் தனது கைவரிசையை காட்டியூள்ளனர்.

அங்கிருந்த மரம் வெட்டும் இயந்திரம், புல் வெட்டும் இயந்திரம், 72 தேயிலை பொதிகள் உட்பட அனைத்துப் பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர். திருட்டு சம்பவங்கள் நடந்த இரண்டு தோட்டங்களுக்குமான இடைவெளி 2 கிலோமீற்றர் தூரம் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − eight =

*