;
Athirady Tamil News

கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியா்கள் பணி பகிஸ்கரிப்பு..!!

0

திம்புள்ள பத்தன பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட ஏனைய உத்தியோகத்தர்கள் இன்றையதினம்(17.03.2018) சனிக்கிழமை காலை முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார் .

நேற்றையதினம்(16.03.2018)வெள்ளிக்கிழமை இரவு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஆதரவாளர்களான மலர்வாசகம் உட்பட ஏனய ஆதரவாளர்கள் கொட்டகலை வைத்தியசாலையின் வைத்திர்களை தகாத வார்த்தையில் பேசியதாகவும், அவர்களை தாக்க முயற்சித்துள்ளதாகவும் கொட்டகலை வைத்தியசாலையின் வைத்தியர்கள் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றை பதிவு செய்துள்ளனா்.

நேற்றையதினம் (16.03.2018) வெள்ளிக்கிழமை இரவு கொட்டகலையில் இருந்து திம்புள்ள பகுதி நோக்கி பயணித்த வான் ஒன்றில் நபர் ஒருவர் மோதிய சம்பவம் தொடர்பில் காயமடைந்த நபர் கொட்டகலை வைத்தியசாலையில் இருந்து கிழங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றபட்டு மேலதிக சிகிச்சைக்காக குறித்த நபர் கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதேவேளை கொட்டகலை வைத்தியசாலையின் வைத்தியர்களின் சேவைக்கு இடையூறு விளைவித்ததாகவும், அவர்களை தகாத வார்த்தையில் பேசியதகவும், அவர்களை தாக்க முயற்சித்த குற்றச்சாட்டுக்கமைய இ. தொ.கா.வின் ஆதரவாளர்கள் திம்புள்ள பத்தைனை பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதோடு ஏனைய ஆதரவாளர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*