;
Athirady Tamil News

மஞ்சல் கடவையில் படுக்கையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவருக்கு எதிராக வழக்கு…!!

0

கண்டி நாவலபிட்டி வீதியை மறித்து மஞ்சல் கடவையில் படுக்கையிட்டு எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஜக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமேவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சாலை ஒழுங்கு மீறல் சட்டத்தின் கீழ் நாவலபிட்டி நீதிவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவலபிட்டி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த ராஜபக்ஷவை இடமாற்றம் செய்யக் கோரி கண்டி – நாவலபிட்டி பிரதான வீதியை மறித்து மஞ்சல் கோட்டு கடவையில் படுக்கையிட்டு ஜக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இந்த ஆர்ப்பாட்டம் கடந்த சனிகிழமை காலை 05மணி முதல் பிற்பகல் 02 மணிவரை நாவலபிட்டி பொலிஸ்நிலையத்திற்கு முன்பாக உள்ள மஞ்சல் கோட்டு கடவையில் சுமார் 09மணித்தியாலங்கள் தொடர்ந்திருந்தது.

இந் நிலையில் இதனைக் கண்டித்து சாலை ஒழுங்கு மீறலின் கீழ் நாவலபிட்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஜக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமேவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.

இதற்கான அனைத்து குற்றவியல் பத்திரங்களும் நேற்று வெள்ளிகிழமை நாவலபிட்டி நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திக்கு….

ஆனந்தவை இடமாற்றம் செய்யக்கோரி ஆனந்த மஞ்சள் கடவையில் ஆர்ப்பாட்டம்…!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 16 =

*