;
Athirady Tamil News

வவுனியா மாவட்ட செயலகத்தில் கோரப்படும் தகவல்கள் வழங்கப்படுவதில்லை…!!

0

வவுனியா மாவட்ட செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினூடாக கோரப்படும் தகவல்கள் வழங்கப்படுவதில்லை.

வவுனியா மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினூடாக மாவட்ட செயலாளரிடம் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு மின் அஞ்சல் ஊடாக அனுப்பிவைக்கப்படும் கோரிக்கைகளுக்கு பதில்கள் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்த மாதம் 22ஆம் திகதி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக வவுனியா மாவட்ட செயலாளருக்கு 2018 வவுனியா மாவட்ட இளைஞர்கள் சேவைகள் மன்றத்தினால் சர்வதேச இளைஞர்கள் பரிமாற்றம் நிகழ்விற்காக தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களின் விபரமும் அவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளையும் வழங்குமாறு கோரி வவுனியா மாவட்ட செயலாளரின் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு இன்று (16.03) வரையில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக கோரப்படும் தகவல்களை 14நாட்களுக்குள் உரியவர்களுக்கு அனுப்பிவைக்கப்படவேண்டும் என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களை வழங்குவதற்கு கால அவகாசம் தேவைப்படுமிடத்தில் காலங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்பதை உரியவர்களுக்கு அறிவிக்கப்படவேண்டும் எனினும் குறிப்பிடப்பட்ட நாட்கள் கடந்த நிலையிலும் அதற்கான பதிலினை வவுனியா மாவட்ட செயலகம் வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கமானது இவ்வருடம் பெப்ரவரி 4ஆம் திகதி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை நாடாளுமன்றத்தில் சட்டமூலமாக வர்த்தக மானியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாவட்ட செயலாளர் ஊடாக கோரப்படும் தகவல்களுக்கு தகவல் உரிமைச்சட்டத்தினூடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை ஒரு தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அத்தகவல்களை மாவட்ட செயலகம் வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + twelve =

*