;
Athirady Tamil News

கடந்த மூன்று மாதத்திற்குள் 1200 ற்கு மேற்பட்ட சிறுவர் துஸ்பிரயோகங்கள் பதிவு…!!

0

ஸ்ரீலங்காவில் கடந்த மூன்று மாதத்திற்குள் 1200 ற்கு மேற்பட்ட சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மீது சிறு வயதிலேயே இவ்வாறான துஸ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்படுகின்றமை பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை மகளீர் தின நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் பெண்கள் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு சந்தர்பத்தை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய சட்டத்தரணி சுபா விதுரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளமையினால் அதிகளவான பெண்கள் வன்முறைக்கு உள்ளாவதாக சுட்டிக்காட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + ten =

*