;
Athirady Tamil News

இலங்கையில் நஸ்டஈடு செலுத்தும் பங்களாதேஸ் கிரிக்கெட் வாரியம்…!!

0

நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதிய போட்டியில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதிய போட்டியின், இறுதி ஓவரில் முறையற்ற பந்து வீச்சை மேற்கொண்டதால், இலங்கை அணி வீரர்களுக்கும் பங்களாதேஸ் அணி வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே பங்களாதேஸ் அணி வீரர்களின் ஓய்வு அறையில் காணப்பட்ட, கண்ணாடியை பங்களாதேஸ் வீரர் ஒருவர் உடைத்துள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இது குறித்து விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், அங்கு பணியில் இருந்த ஊழியர் ஒருவர் கண்ணாடியை உடைத்த வீரரையும் இனங்காட்டியுள்ளார். மேலும் அங்கு காணப்பட்ட கமரா பதிவையும் விசாரணை குழு பார்வையிட்டுள்ளது.

இந்நிலையில் பங்களாதேஸ் கிரிக்கெட் வாரியம் நஸ்டஈடு கொடுப்பதற்கு ஒப்பு கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + nine =

*