;
Athirady Tamil News

பிலிப்பைன்ஸ் நாட்டில் வீட்டின் மீது விமானம் மோதிய விபத்தில் 9 பேர் பலி..!!

0

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவின் வடக்கே உள்ள புலாக்கான் மாகாணத்தின் பிலாரிடெல் விமான நிலையத்தில் இருந்து ‘பைப்பர்-23 அப்பாச்சி’ ரக சிறிய விமானம் லாவோக் நகரை நோக்கி இன்று புறப்பட்டு சென்றது.

அந்த விமானத்தில் விமானி உட்பட 5 பேர் இருந்தனர். புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமானியை கட்டுப்பாட்டை இழந்து நிலைகுலைந்த விமானம், அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் பாய்ந்தது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த ஐந்து பேரும், ஒரு வீட்டில் இருந்த நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 9 உயிர்களை குடித்த இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + 6 =

*