;
Athirady Tamil News

தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு…!!

0

சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்கும் மாணவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுழிபுரத்தை சேர்ந்த பிரபாகரன் ஹரிகரன் (வயது 09) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குறித்த மாணவன் நேற்று (வெள்ளிக்கிழமை) பாடசாலைக்கு சென்ற போது புத்தகப் பை தடக்கி கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். அதனையடுத்து பாடசாலை ஆசிரியர்கள் மாணவனை சிகிச்சைக்காக சங்கானை வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றனர்.

எனினம் மாணவன் வைத்தியசாலைக்குக் கொண்டுவரும் வழியிலேயே மாணவன் உயிரிழந்துவிட்டதாக சங்கானை வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

அதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாணவனின் சடலம் கொண்டுசெல்லப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × two =

*