ஸி ஜின் பிங் சீன அதிபராக மீண்டும் தேர்வு..!!

சீன அதிபராக ஸி ஜின் பிங் பதவி வகிக்கிறார். சீனாவில் ஒருவர் 2 தடவை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும். ஸி ஜின் பிங் கடந்த 2013-ம் ஆண்டு முதன் முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எனவே அவர் வருகிற 2023-ம் ஆண்டு வரை மட்டுமே தொடர்ந்து அதிபர் பதவி வகிக்க முடியும். ஆனால் அவர் சீனாவின் சக்தி மிகுந்த தலைவராக உருவெடுத்தார்.
மத்திய ராணுவ கமிஷனின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் சீன ராணுவத்தின் அனைத்து அதிகாரங்களையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் சீன அதிபர் பதவி வகிக்கும் காலவரம்பு நீக்கி கடந்த 11-ந்தேதி தேசிய மக்கள் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில் 2900 பேர் ஆதரவாக வாக்களித்தனர். அதன் மூலம் ஸி ஜின் பிங் ஆயுள் முழுவதும் அதிபர் பதவி வகிக்க வழி செய்யப்பட்டுள்ளது. மாவோக்கு பிறகு அப்பெருமை ஸி ஜின் பிங்குக்கு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் ஸி ஜின்பிங் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இன்று முறைப்படி பதவி ஏற்பார் என தெரிகிறது.
அவரது நெருங்கிய நண்பர் வாங் குய்ஷான் துணை அதிபராகிறார். இவர் தவிர முன்னாள் பிரதமர் லீ கியாங் தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். அவர் தவிர அனைத்து மந்திரிகள் மற்றும் கவர்னர்கள் நீக்கப்படுகிறார்கள். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர்.