;
Athirady Tamil News

பாகிஸ்தானில் பெண் எம்.பி. மீது தக்காளி, முட்டைகள் வீசி தாக்குதல்..!!

0

பாகிஸ்தானில் இந்த மாதம் தொடர்ச்சியாக அரசியல் தலைவர்கள் தாக்கப்பட்டு அவமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு முன் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாப் செரீப் மற்றும் உள்துறை மந்திரி அஹ்ஸான் இக்பால் மீது ஷூ வீசப்பட்டது. அதே போல் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி கவாஜா ஆசிப் மீது மை வீசப்பட்டது. இதையடுத்து நான்காவதாக பெண் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (குலாலாய்) கட்சியின் தலைவியும் தேசிய சபை உறுப்பினருமான ஆயிஷா குலாலாய் மீது இம்ரான் கான் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.

பகவால்பூர் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அந்நகரில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார் ஆயிஷா குலாலாய். இந்நிலையில், அவர் ஓட்டலிருந்து வெளியே வரும் போது இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் குலாலாய்க்கு எதிராக முழக்கமிட்டு அவரை முற்றுகையிட்டனர். பின்னர் முட்டைகள் மற்றும் தக்காளிகளை வீசியுள்ளனர்.

குலாலாய் 2012 முதல் சென்ற ஆண்டு வரை இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியில் இருந்தார். பின்னர் இம்ரான் கான் மற்றும் கட்சியினர் பெண்களுக்கு மரியாதை அளிக்கவில்லை என பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அதன்பின் கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக கட்சி தொடங்கி நடத்தி வருகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − one =

*