;
Athirady Tamil News

நேபாள துணை ஜனாதிபதி பதவிக்கு நந்த பகதூர் வேட்பு மனு தாக்கல்..!!

0

நேபாளத்தின் துணை ஜனாதிபதியாக நந்த பகதூர் பதவி வகித்து வருகிறார். அவரின் பதவிக்காலம் முடிவடையப் போகும் நிலையில் வருகின்ற 23-ம் புதிய துணை ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று நடைபெற்றது.

இந்நிலையில், நந்த பகதூர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 2 மணியளவில் முடிவடைந்தது. நந்த பகதூரை தவிர யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + thirteen =

*