;
Athirady Tamil News

அமெரிக்க புலனாய்வு துறை அதிகாரி ஆண்ட்ரூ மெக்கேப் நீக்கம்..!!

0

அமெரிக்க புலனாய்வு துறையின் துணை இயக்குனராக இருந்தவர் ஆண்ட்ரூ மெக்கேப். இவர் அதிபர் டொனால்டு டிரம்பின் அரசியல் எதிரியாக கருதப்பட்டவர். அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்புக்கு ஆதரவாக ஹிலாரி கிளிண்டனின் இ-மெயிலில் அவரது நிகழ்ச்சிகள் மற்றும் உரையை ரஷிய உளவுத்துறை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அது குறித்த விசாரணையில் இவர் ஈடுபட்டிருந்தார். தற்போது இவர் விடுமுறையில் இருக்கிறார். இந்த நிலையில் அவர் நீக்கப்பட்டுள்ளார். நாளை மறுதினம் அவரது 50-வது பிறந்த தினம் வருகிறது. அதற்கு 2 நாட்கள் முன்பு இவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணி ஓய்வு பெற்று அவர் முழு ஓய்வு ஊதியம் பெறும் நிலையில் இருந்தார். பணி நீக்க உத்தரவை அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ஜெய் செசன்ஸ் பிறப்பித்துள்ளார். #Tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − thirteen =

*