;
Athirady Tamil News

ஆபாச வீடியோ காட்டி 6 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம்- ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை..!!

0

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் சஞ்சய் படேல் என்பவர் இசைப்பள்ளி நடத்தி வந்தார். அவரது வகுப்பில் ஏராளமான மாணவர்கள் பயின்று வந்தனர். மேலும், அவர் விரிந்தவான் பகுதியில் உள்ள இசை வகுப்பில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

சஞ்சய் வகுப்பில் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி சிறுமி(6) ஒருவர் சேர்ந்துள்ளார். அவள் சேர்ந்த 4 வது நாள் வகுப்பு முடிந்த பின்னர் தனது பெற்றோர் வருகைக்காக காத்திருந்தாள். அப்போது அங்கு வந்த சஞ்சய் சிறுமியிடம் ஆபாச படங்களை காட்டியுள்ளார். மேலும், அவளை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார்.

இதையடுத்து, சஞ்சய் படேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களது வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நீதிபதி ஏ.எஸ். பாய்சரே அளித்த தீர்ப்பில்,’சஞ்சய் மீதான அனைத்து குற்றங்களும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும். மேலும், 1,500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 19 =

*