;
Athirady Tamil News

பீகாரில் காலி மனைக்கு மோடி பெயரை வைத்த முதியவர் கொலை..!!

0

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டம் புத்தலா கிராமத்தை சேர்ந்தவர் ராமசந்திர யாதவ் (70).

பா.ஜனதா அனுதாபியான இவர் அங்குள்ள சர்ச்சைக்குரிய காலி மனையில் பிரதமர் நரேந்திர மோடி சதுக்கம் என்ற பெயர் பலகையை வைத்து உள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு அவர் இந்த பெயர் பலகையை வைத்தார்.

மோடியின் பெயரை காலி மனைக்கு வைத்ததற்கு அந்த பகுதியில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் 40 முதல் 50 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் 30 மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றது. மோடியின் பெயரை மாற்றுமாறு ராம் சந்திர யாதவை மிரட்டியது. ஆனால் அவரோ அதற்கு மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் அவரது தலையை துண்டித்து கொன்றது. இதே போல அவரது மகன் கமலேஷ் யாதவும் தாக்கப்பட்டார்.

பா.ஜனதா ஆதரவாளரான அவர் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஷ்டீரிய ஜனதா தளத்தை சேர்ந்தவர்கள் தான் இந்த கொலை சம்பவத்தை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை அந்த கட்சி மறுத்துவிட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக தர்பனுகா போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ராம்சந்திர யாதவின் மற்றொரு மகன் கமல்தேவ் கூறியதாவது:-

ஒரு கும்பல் ஆக்கி ஸ்டிக் மற்றும் வாள்களுடன் வந்து எனது தந்தையை கடுமையாக தாக்கியது. பேச்சுவார்த்தை நடத்தும் முன்பே பயங்கரமாக தாக்கி எனது தந்தையின் கழுத்தை அறுத்தனர். எனது சகோதரனையும் அந்த கும்பல் கொல்ல முயன்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

பீகாரில் சமீபத்தில் நடந்த எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து ஒரு கும்பல் அங்கு சென்று அந்த காலி மனைக்கு லாலுவின் பெயரை வைக்க விரும்பியது.

இதன் காரணமாகவே அந்த முதியவர் கொல்லப்பட்டுள்ளார். ஆனால் போலீசார் இதுகுறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 4 =

*