;
Athirady Tamil News

ஆபாச நடிகையிடம் 2 கோடி டாலர் இழப்பீடு கேட்டு டிரம்ப் வக்கீல்கள் நோட்டீஸ்..!!

0

அமெரிக்காவை சேர்ந்த ஆபாச நடிகை ஸ்டப்பானி கிளிஃபோர்ட். இவர் ஸ்டார்மி டேனியல்ஸ் என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார். இந்நிலையில், அவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண கோர்ட்டில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் மீது ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.

அதில் டிரம்ப் 2006-ம் முதல் 2007-ம் ஆண்டு வரையில் தன்னுடன் தொடர்பில் இருந்ததாகவும், அப்போது அவருடன் பல இடங்களுக்கு தான் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்ட பின்னர் தங்களிடையேயான உறவை வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்வதற்காக அவர் முயற்சித்தார்.

அதற்காக தனக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலர் பணம் கொடுத்ததாகவும், அப்போது ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவர் தொடுத்துள்ள வழக்கில் அப்போது போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஸ்டார்மி டேனியல்ஸ் சார்பில் அவரும், டிரம்ப் சார்பில் அவரது வழக்கறிஞரும் மட்டுமே கையெழுத்து போட்டுள்ளனர். முறைப்படி இருவருக்கு இடையேயான ஒப்பந்தங்களில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே கையெழுத்திட வேண்டும்.

ஆனால் அந்த ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்து போடாததால் அது செல்லாது என அறிவிக்கக்கோரி ஸ்டார்மி டேனியல்ஸ் தொடுத்துள்ள வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஸ்டார்மி டேனியல்ஸ் பெற்றுகொண்ட தொகையை தங்களது கையில் இருந்து பணமாக தந்து சமரச ஒப்பந்தம் செய்துகொண்டதாக டிரம்ப்பின் வக்கீல் மைக்கேல் கோஹென் தெரிவித்துள்ளார்.

இந்த சமரச தொகையிலோ ஒப்பந்தத்திலோ டிரம்ப்புக்கும் அவரது நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது கட்சிக்காரரான டிரம்ப்பின் நன்மதிப்புக்கு அவப்பெயர் ஏற்படாத வகையில் இந்த சமரச ஒப்பந்தத்தில் நானும் ஸ்டார்மி டேனியல்சும் கையொப்பமிட்டோம்.

ஆனால், இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பிறகு சுமார் 20 முறை இவ்விவகாரத்தில் எழுத்து மூலமாக கொடுத்த வாக்குறுதிகளை மீறிய வகையில் நடந்து கொண்டதால் ஸ்டார்மி டேனியல்ஸ் இடமிருந்து 2 கோடி டாலர்கள் இழப்பீடு கேட்டு புதிதாக வழக்கு தொடர டொனால்ட் டிரம்ப்பின் வக்கீல்கள் தற்போது தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + seven =

*