;
Athirady Tamil News

மது வாங்க பணம் தராத மைத்துனன், மாமாவை சுட்டுக் கொன்ற குடிமகன்..!!

0

மத்திய பிரதேசம் மாநிலத்தின் பிந்த் மாவட்டத்தில் உள்ள பச்சியாரா கிராமத்தை சேர்ந்தவர் பஜன்லால் (27). இவர் இன்று மதியம் மது வாங்குவதற்காக மாமா கம்லேஷிடம் பணம் கேட்டார். ஆனால், மது வாங்குவதற்கு கம்லேஷ் பணம் தரமறுத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பஜன்லால் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் கம்லேஷை சுட்டார். சத்தம் கேட்டு தடுக்க வந்த மைத்துனன் பிரதீப்பையும் சுட்டார். இதில் இருவரும் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய பஜன்லாலை தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − six =

*